கேள்வி: சனி லக்னாதிபதியாக இருந்து அந்த சனிபகவான் ஏழாம் பாவத்திலிருந்து எழுக்குரிய கிரகம் ஆறாம் பாவத்தில் வலிமை பெற்று புதனோடும் உச்சம் பெற்று இருக்கிற குருவோடும் இணைந்திருக்கும் பொழுது அந்தப் பெண்ணுக்கு யோகம் வருமா? அல்லது அந்த பெண்ணை மணந்த கணவனுக்கு யோகம் வருமா? அல்லது இருவருக்குமே யோகம் வருமா?
இறைவன் அருளால் உச்சமே பெற்றிருந்தாலும் கூட சில நன்மைகளை தந்தாலும் கூட ஏழு ஆறோடு கூடி விடுகிறது. லக்னத்திற்குரிய பாவம் அங்கே கெட்டுப்போய் விடுவதால் கட்டாயம் இருவருக்கும் கெடு பலன்தான் அதிகமாக இருக்கும். சுக பலன் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் சற்றே விழிப்புணர்வு பெற்று இறை வழியில் வந்துவிட்டால் கெடு பலனை குறைத்து நல்ல பலனை அதிகரித்துக் கொள்ளலாம். இதை வேறு வகையில் கூறினால் ஆன்ம வழியை நோக்கி வாழ்க்கையை திருப்பி கொண்டால் வாழ்க்கை ஒரளவு நன்றாக இருக்கும். லோகாய சுகத்திற்காக வெற்றிக்காக பாடுபட்டால் வேதனைகள் தான் மிஞ்சும். உடல் நலிவு தான் ஏற்படும்.