கேள்வி: விரைய ஸ்தானம் வலுவாக இருக்கும் ஜாதகர் இறைவனிடம் தன்னுடைய பூர்வ ஜென்ம பாவங்களை விரயம் செய்துவிடு என்று பிரார்த்தனை வைக்கலாமா?
இறைவனை நோக்கி இதுவரை சேர்த்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு ஒரு வரத்தை கொடு என்று கேட்டால் கட்டாயம் தருவார். ஆனால் அந்த வரத்தை தாங்குகின்ற மனோபலத்தை மனிதன் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாவம் சும்மா எளிமையாக ஒரு மனிதனை விட்டுச் சென்று விடாது. பல துன்ப அனுபவங்களை தந்துதான் பாவம் அவனை விட்டுச் செல்லும். என்னை விட்டு பாவம் போக வேண்டும் என்று ஒருவன் இறைவன் நோக்கி வேண்டினால் நிறைய துன்பங்களை எதிர்கொள்ள அவன் ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்படி நீ ஆயத்தமாக இருந்தால் தாராளமாக உன் பிரார்த்தனையை இறைவனை நோக்கி வைக்கலாம்.