கேள்வி: கும்பாபிஷேகத்தின் போது கருடன் வருவது பற்றி:
சுபசகுனம் தான். பல்வேறு தருணங்களில் கருடாழ்வாரே வந்து தரிசனம் தருவதும் உண்டு. ஆனால் சில ஆலயங்களில் அவ்வாறு வருவதில்லை. வேறு சில பறவைகள் வருகிறது. அதுவும் தேவலோகத்தில் இருந்து வரக்கூடிய பறவைகள் தான். எப்படி இருந்தாலும் அதை சுப சகுனமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். கருடன் வந்தால் மட்டும்தான் அது நன்மையை தரும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.