கேள்வி: ஐயனே இயலாமையை என்னும் போது கோபமும் வருத்தமும் வருகிறது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?
எண்ணங்களின் தொகுப்பான மனம் பலவீனமாக இருக்கின்றது என்பதின் பொருள் இது. அதீத சினம். அதீத சோர்வு. அதீத வருத்தம். அதீதமான எந்த ஒரு உணர்வு நிலையும் மனதின் பலவீனத்தை காட்டுகிறது. உடல் பலவீனமானால் நோய் வருவது போல எண்ணங்கள் எண்ணங்களின் தொகுப்பான மனம் பலவீனமானால் இவ்வாறு உணர்வுகளின் விளிம்பில் மனிதன் நின்று விடுகிறான். ஆனால் இவற்றால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதீத உணர்வு நிலையால் மனிதனின் தேக நலம் பாதிக்கப்படும். அவரின் செயல் திறன் குன்றும். எனவே அதீத சோகமோ துன்பமோ அல்லது சோர்வோ இவைகள் ஒரு மனிதரிடம் இருக்கிறது என்றால் என்ன பொருள். இதுபோல் மனம் மிக மிக பலவீனமாக இருக்கிறது என்பது பொருள்.
மனிதனின் எண்ணத்திலே இவ்வாறெல்லாம் நடக்க வேண்டும். இவ்வாரெல்லாம் நான் செயலை துவங்குகிறேன். அது இவ்வாறெல்லாம் சென்று முடிய வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பை வைத்திருக்கிறான். ஆனால் நடைமுறையில் அந்த எதிர்பார்ப்பு நடக்காமல் தடை மேல் தடை வந்துவிட்டால் போதும் அப்படியே அமர்ந்து விடுகிறான். எனவே மனிதன் தன் மனதை உறுதியாக பலமாக வைத்திருக்க வேண்டும். பலமான மனம்தான் மனிதனுக்கு நல்லதொரு ஆரோக்கியத்தை தரும். தேகம் உற்சாகமாக இருக்க வேண்டும். உள்ளமும் உற்சாகமாக இருக்க வேண்டும். எனவே இதற்கு எளிய வழி எளிய முறையில் முதலில் பிரார்த்தனைகளை செய்து விட்டு மனதை சுய ஆய்வு செய்து எப்படி இல்லத்திலே வேண்டாத பொருள்கள் இருந்தால் இல்லம் தேவையற்ற பொருட்களால் நிரம்பி இருந்தால் அந்த இல்லம் எப்படி இருக்குமோ விரும்பத்தகாது இல்லமாக இருப்பது போல உள்ளத்தில் தேவையற்ற எண்ணங்கள் இருந்தால் அது விரும்பத்தகாத உள்ளமாகத்தான் இருக்கும் பலவீனமாகி.
எனவே எந்தெந்த பொருட்கள் தேவையில்லை என்று மனிதன் இல்லத்தை சுத்தம் செய்யும் போது முடிவெடுக்கலாம். அதேபோல உள்ளத்தையும் அன்றாடம் ஆய்வு செய்து எந்தெந்த எண்ணங்கள் தேவையில்லையோ அந்த எண்ணங்களை எண்ணுவதை நிறுத்தி தொடர்ந்து நல்ல எண்ணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டே வந்தால் மனம் உறுதி அடையும். மனம் உறுதி அடைந்து விட்டால் எந்த விதமான நிகழ்வு நடந்தாலும் மனதிற்கு அது குறித்து அச்சமும் குழப்பமோ கவலையோ இருக்காது. அந்த நிலையிலே தொடர்ந்து ஒரு மனிதன் இருந்தால் தொடர்ந்து தேகத்திற்கும் பயிற்சிகளை செய்து கொண்டே வந்தால் கட்டாயம் அதீத மிகு உணர்வு நிலைக்கு ஆளாகாமல் இருக்கலாம். அப்படி அதீத உணர்வு நிலை வரவில்லை என்றால் மனம் சோர்ந்து போகாது. மனம் சோரவில்லே என்றால் உடலும் நன்றாக இருக்கும்.