அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
கடமை ஆற்றுவது என்பது வேறு. கவலை கொள்ளுவது என்பது வேறு. இல்லிற்கும் (இல்லம்) ஏனையோருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்ற வேண்டும். கடமைகளை தட்டிக் கழிக்க யாங்கள் சொல்லவில்லை. கடமைகளை சுமைகளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று தான் கூறுகிறோம். வாழ்வை எளிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும். அகண்ட லட்சியத்திற்காக ஏங்குவதைவிட அகண்ட லட்சியத்திற்காக ஏங்கி உழைக்க வேண்டும். இன்பம் துன்பம் நிலைதாண்டி வாழ முயல்வதே மெய் ஞானமாகும்.
அனைத்தைப் பற்றி யும் அதைப் பற்றி யும் எதைப் பற்றி யும் கவலை கொள்ளாது உறவு பற்றி யும் கவலை கொள்ளாது கவலை பற்றி யும் கவலை கொள்ளாது பிரிவு பற்றி யும் கவலை கொள்ளாது பிறர் பரிவு பற்றி யும் கவலை கொள்ளாது தெளிவு பற்றி யும் கவலை கொள்ளாது குழப்பம் பற்றி யும் கவலை கொள்ளாது தனம் பற்றி யும் கவலை கொள்ளாதே ருணம் பற்றி யும் கவலை கொள்ளாது பிறர் சினம் பற்றி யும் கவலை கொள்ளாது தினந்தினம் எதைப் பற்றி யும் கவலை கொள்ளாது பற்றி பற்றி வாழாது பற்றா பற்றி வாழ இறை அருளும் அப்பா.