அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
மனித வாழ்க்கையில் கடமையை செய்தோம். பிரார்த்தனை செய்தோம். பிறருக்கு நன்மையை செய்தோம் என்று போக வேண்டும். பெரிய அளவிலே ஒன்றின் மீது பற்றும் அதி தீவிர பாசமும் வைத்தால் பிறகு அது நம்மை பாடாய்படுத்தும். இன்பம் என்ற ஒன்றை எவன் ஒருவன் உணருகிறானோ அவனால் தான் துன்பத்தை உணர முடியும். எவன் எதிலேயும் இன்பத்தையும் பார்க்கவில்லையோ அவனுக்கு எதனாலும் எவற்றாலும் துன்பமில்லை. அது இறை ஒருவருக்குத் தான் சாத்தியம். அதனால்தான் இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே என்று கூறப்படுகிறது. அண்ட சராசரங்களை படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தரக்கூடியது ஏதுமில்லை. தன் உள்ளத்தை தவிர.
