அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
தர்மத்தை கொடுத்துக் கொண்டே போ. நல்லவை தீயவை நன்மை தீயவைகளை ஆராய வேண்டாம். இந்த தர்ம உபதேசத்தை எவன் கடைபிடிக்கிறானோ அவன் தினந்தோறும் இறையின் அருளுக்கு பாத்திரமாவான். அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பது தான் மனிதனின் எண்ணம். ஆனால் யாங்களோ அடுத்த பிறவிக்கு சேர்க்க செல்கிறோம்.
கடமையை ஆற்றுவதோடு உடலுக்காக உழைப்பதோடு உள்ளுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்த ஆத்மாவிற்காகவும் உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும். மனிதப் பிறவியின் உண்மையான நோக்கம் அதுதான். இக்கருத்தை ஆழ்மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். கொடுத்து கொடுத்து வறுமையை அடையும் விதி இருந்தாலும் பாதகம் இல்லை. கொடுத்ததினால் ஒரு நிலை வந்தால் அதுதான் இந்த உலகத்தில் உச்சகட்ட வளமை. அவன் தான் இறைவனுக்குப் பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள்.
