அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் பிறரிடம் உள்ள நன்மை தரும் செயல்களையெல்லாம் பொதுவில் பாராட்டுகிறானோ எப்பொழுதெல்லாம் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள குறைகளை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறானோ அப்பொழுதே அவன் தன்னை உணரத் துவங்கி விடுகிறான். இதிலிருந்து அவன் இறைவனை நோக்கி செல்வதற்குண்டான முதல் அடியை எடுத்து வைக்கிறான் என்பது பொருளாகும்.
நான் என்ற தனித்தன்மை இல்லாத ஒழிந்து போன பிறகுதான் அங்கே சித்தன் முளைக்கிறான்.