அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
அள்ளி அள்ளி வழங்குகின்ற தடைபடாத தர்ம குணத்தினால் மட்டும்தான் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சேர்ப்பதல்ல சேர்த்து வைப்பதல்ல சுகம். இருப்பதையெல்லாம் தந்துகொண்டே இருப்பதே சுகம். இழக்க இழக்கத்தான் மனிதன் பெறுகிறான். எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ நியாயமான விஷயங்களுக்கு எதையெல்லாம் ஒரு மனிதன் தன்னையே எப்போது இழக்கிறானோ அப்பொழுதுதான் ஒருவனுக்கு இறைவனின் பரிபூரண கருணை கிட்டும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு மனிதன் வழங்கி கொண்டே இருத்தல் என்பதே இறைவனின் அருளையும் ஏன்? இறைவனின் தரிசனத்தையும் பெறுவதாகும். எனவே கொடுப்பது ஒன்று மட்டும் தான் இறைவனின் கருணையை எளிதில் பெறுவதற்குண்டான வழியாகும்.