கேள்வி: பிறவி எடுக்கும் போதே இன்னவிதமான பாவ காரியங்கள் செய்ய வேண்டும் என்று விதிக்கப் படுகின்றதா? ஆம் எனில் அப்படி ஏற்கனவே விதிக்கப் பட்ட பாவ காரியங்கள் செய்யும் போது அந்த பாவத்திலிருந்து விலக்கு உண்டா?
இறைவன் அருளால் நீ கூறுவதை உண்மை என்று வைத்துக்கொண்டு பார்ப்போம். விதிக்கப்பட்டது அல்லது விலக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுதே ஒருவன் உடல் பலம் எதற்கு பெற வேண்டும்? பிறரோடு போரிட வேண்டும் என்றால் உடல் பலம் வேண்டும். பிறரோடு போரிடுவதையே முட்டாள்தனம் என்று நாங்கள் கூறும் பொழுது போர் என்பது அடிப்படையில் மனிதனுக்கு தேவையில்லாத விஷயம். அடுத்த நிலையிலே அப்படி ஒருவன் வாழ வேண்டும் என்ற குடும்பத்திலோ அல்லது ஒரு சூழலிலே பிறப்பு எடுக்கிறான் என்றாலே என்ன பொருள்? அந்த பாவத்தை செய்துதான் ஆகவேண்டும் என்கிற ஒரு பிறப்பு எடுக்க வேண்டுமானால் அவன் என்ன பாவத்தை ஏற்கனவே செய்திருப்பான்? எனவே பாவத்தை செய்யாமல் இருந்தால் தவிர்க்க முடியாமல் பாவத்தை செய்ய வேண்டிய அல்லது ஒரு பாவத்தை செய்து கொண்டே அதற்கு ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய நிலைமை ஒரு மனிதனுக்கு வராது. வேதங்களிலோ அல்லது எம்போன்ற மகான்களோ இதுபோல் விலங்குகளைக் கொன்று இவர்கள் இவர்கள் உண்ணலாம். இவர்கள் இவர்கள் உண்ணத் தேவையில்லை என்று கூறவில்லை. இவைகள் அனைத்துமே இடைசெருகல்களே எந்த இடத்திலும் இறைவனோ ஞானியர்களோ இதுபோன்ற விஷயங்களைக் கூறவில்லை. போதிக்கவில்லை. மனிதன் தன் சுயநலத்திற்கேற்ப இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டான்.