கிளி ஜோதிடம் பற்றி
இதனை நம்ப வேண்டாமப்பா. ஆறு அறிவுக்கு ஐந்து அறிவா ஆருடம் சொல்வது? யோசிக்க வேண்டும். அது போன்ற ஜோதிடத்தை உன்னிப்பாக கவனித்தால் அந்த மனிதனின் கை விரல்கள் எவ்வாறு அசைகிறதோ அதற்கு ஏற்ப தான் அந்த பறவை செயல்படும். எனவே அவன் விரலை ஒரு விதமாக சைகை செய்வான். அதற்கு ஏற்ப தான் அந்த பறவை நடந்து கொள்ளும். என்றாலும் இந்த கிளி ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த நிலையில் இருந்தது என்பது உண்மை. தற்காலத்தில் இது வெறும் வயிற்று பிழைப்பு என்பதால் இவற்றை முற்றிலும் ஓரம் கட்டுவது நல்லது.
இது போன்று தான் ஆங்காங்கே இறைவன் வாக்கு சொல்கிறான். அம்பாள் வந்து வாக்கு சொல்கிறாள் என்பது எல்லாம். இது சுத்த வயிற்று பிழைப்பு. எனவே பிழைப்பு என்ற வகையிலே அந்த மனிதன் பிழைத்து விட்டு போகட்டும். சாதரணமாக இது போன்ற வாக்குகளிலே பெரிய அளவிலே பாதிப்பு இல்லாத வரையில் எந்த பிரச்சனையும் இல்லை. இது போன்றவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம்.
ஐயா, வணக்கம்….என் தாயும் ,தந்தையும் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்…என் தம்பிகள் வருட திதியை சரிவர கொடுப்பதில்லை… நான் முதல் பெண் … நான் அவர்களின் ஆத்ம சாந்திக்காக என்ன செய்ய வேண்டும்?…
தாய் தந்தைக்கு மகன் தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை மகளும் கொடுக்கலாம். இதன் வழியாக மூதாதையர்கள் நல் வழி செல்வார்கள். திதி கொடுப்பவர்களுக்கு நன்மை உறுதியாக வந்து சேரும். தாய் தந்தை நினைவு நாளில் தங்களால் இயன்ற அளவு எத்தனை பேருக்கு உணவு அளிக்க முடியுமோ அத்தனை பேருக்கு உணவு அளியுங்கள். தங்களால் இயன்ற அளவு ஒருவருக்கேனும் உணவு அளியுங்கள். பின்பு கையில் சிறிது நீரை வைத்துக் கொண்டு அன்னதானம் செய்த பலன் தாய் தந்தைக்கு செல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு அந்த நீரை கீழே பூமிக்கு விட்டு விடுங்கள். நீங்கள் எவ்வளவு ஆத்மார்த்தமாக செய்கிறீர்களோ அந்த அளவு பலன் மூதாதயைர்களுக்கு செல்லும். இது சிறந்த வழி என்று சித்தர்களின் மார்க்கத்தில் சொல்லப்படுகிறது.
மிக நல்ல பதிவு… வாழ்க வளமுடன்….
It is true