கேள்வி: சில நாடி ஜோதிடர்கள் வருபவர்களின் பிரச்சனைகளை கேள்விகளாக எழுதி குருவின் பாதத்தில் வைத்தால் அவரே ஓலைச்சுவடி மூலம் பிரசன்னமாகி தக்க பதில் தருவார் என்று கூறுகிறார்கள் அது குறித்து:
இது குறித்து யாங்கள் என்ன கூறுவது? உண்மை ஆங்காங்கே இருந்துகொண்டு இருக்கும் உண்மைக்கு மாறான நிகழ்வும் இருக்கத்தான் செய்யும். மனிதர்கள்தான் அதனை நடைமுறையில் உணர்ந்து கொள்ள வேண்டும். யாம் ஏதாவது கூறினால் அது தேவையில்லாத எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே எப்போழுது ஒரு இடம் செல்கிறீகளோ அந்த இடம் மனதிற்கு பிடிக்கவில்லையா? இந்த சித்தர் அருட் குடிலாக இருந்தாலும் இதனையும் சேர்த்தே யாம் கூறுகிறோம். ஓரிரு முறை வருகிறீர்கள். வாழ்க்கையில் ஏதும் பெரிதாக மாற்றமில்லை அல்லது எதுவும் திருப்தியில்லை என்றால் தாராளமாக மனிதன் தன் கடமையை பார்த்துக் கொண்டு செல்லலாம். மீண்டும் மீண்டும் போராட வேண்டிய அவசியமில்லை என்றுதான் நாங்கள் கூறுகிறோம். இன்னவன் கேட்கின்ற வினா காலாகாலம் எம்முன்னை கேட்கப்படுவதுதான் மனிதன் தவறுகளை செய்து கொண்டுதான் இருப்பான். அந்த தவறுகளிலிருந்து அவனை வெளியே கொண்டுவர வேண்டும் என்றுதான் ஞானிகளும் மகான்களும் போராடுகிறார்கள். எமது நாமத்தை வைத்தும் தவறுகள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். மனிதர்கள்தான் இதுபோன்ற மனிதர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவன் விதி. அதுபோன்ற இடத்திற்கு சென்று அவன் ஏமாற வேண்டுமென்று இருந்தால் அது அங்ஙனம்தான் நடக்கும்.