அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
உண்மையாகவே ஒரு மனிதன் மனஉளைச்சல் கொள்ள வேண்டியது அறிய வேண்டியதை விட்டுவிட்டு ஹரியை அறிய வேண்டியதை விட்டுவிட்டு அறியாதவற்றையெல்லாம் அறிந்து கொண்டிருக்கிறார்களே. இந்த அறியா சனங்களை எண்ணி உண்மையில் வேதனை கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மனிதன் மெய்யாக மன அழுத்தம் கொள்ள வேண்டியது மெய்ப் பொருளை அறியாமல் பொய்ப் பொருள் பின்னால் செல்கிறோமோ என்றுதான். ஆனால் அவனுக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் பொய் பொருள் பின்னால் அழியக் கூடிய வாழ்க்கைக்கு பின்னால் சென்று கொண்டே அதனால் தன்னைத் தானே சுயa சித்திரவதைக்கு ஆளாக்கிக் கொள்வதும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக் கொள்வதும் ஒரு வகையான அறியாமை தான். அந்த அறியாமையை அவனுக்கு தருவது அவன் செய்த பாவ வினைகள் தான். அந்த வினைகளின் எதிரொலி தான் சுற்றி சுற்றி மனிதனை பலவீனப்படுத்துகிறது. இதற்கு மீண்டும் மீண்டும் வழியென்றால் இறைவனை நோக்கி செல்வதும் பக்தி செலுத்துவதும் தர்மம் செய்வதும். இது ஒன்றேத் தவிர வேறு வழி இல்லையப்பா.