கேள்வி: அருணகிரிநாதர் பாடிய நாத விந்து கலாதீ நமோ நம என்ற வரிகளின் பொருள்:
இப்பொழுது உள்ள கிரக நிலையிலே இதன் பொருள் கூறுவது கடினம். முன்பே துறவு நங்கை கேட்டுவிட்டாள். பின்னர் உரைப்பதாக கூறியிருக்கிறோம். எனவே (இதற்கும்) பின்னர் உரைக்கிறோம். இருந்தாலும் இதன் பொருள் என்பது ஆண் சக்தி பெண் சக்தி சேர்ந்த அந்த சங்கமத்தை குறிப்பதாகும். இரண்டும் சேர்ந்த நிலையிலே உள்ள இறைவா என்பது சூட்சும பொருளாகும்.
விளாங்கனி பழுக்கும் முன்னர் எப்பொழுதுமே ஓடோடு ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். பலத்த பிறகுதான் ஓட்டை விட்டு ஒதுங்கி தனியாக உள்ளே சுழன்று ஆடும். எனவே பக்குவம் பக்குவம் பக்குவம் என்ற நிலை வந்த பிறகுதான் இந்த நினைவு சாத்தியமாகும். இல்லை என்றால் தானே தானாக தன்னைத்தான் வேறாக பார்க்க இயலாமல் போய்விடும்.