அகத்தியரின் பொது வாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இத்தருணம் முடவன் வாரம் தன்னிலே இவ்விடத்திலே சேர்ந்து வந்து இதுபோல் கலந்தாய்விலே கலந்து கொண்டு இதுபோல் மனம் உவந்து இவையெல்லாம் செய்யலாம் என்று எண்ணம் கொண்ட செயலும் கொண்ட அனைவருக்கும் என் பரிபூரண நல்லாசிகள்.
இது போல் பல்வேறு விதமான வாக்குகளை பல்வேறு தருணங்களில் எம்மை நாடும் மாந்தர்களுக்கு பலமுறை கூறியிருந்தாலும் கூட பலமுறை கூற வேண்டிய தருணம் யாதென்றால் கூறுகின்ற வாக்கியம் தன்மையை கேட்கின்ற மனோபாவத்தை பொருத்து ஒவ்வொரு மனிதனும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோல் மனம் மகிழ்வாக ஏதாவது மகிழ்வு என்ற சொல்லாடல் அந்தந்த மனிதனின் மனநிலையை பொறுத்து இங்கே நாங்கள் கையாளுகின்றோம். அப்படியொரு மகிழ்வில் வந்து அமரும் போது நாங்கள் கூறுகின்ற தத்துவார்த்த விளக்கங்கள் எல்லாம் திருப்தியாக ஏற்புடையதாக இருக்கிறது. இறையை நம்புகிறான். எம்மை நம்புகிறான். ஆனால் அவன் எண்ணுகிற நிலையில் வாழ்வு நிலை இல்லை என்ற ஏக்கத்தோடு விரக்தியோடு அதிருப்தியாக எம்முன்னே அமரும் பொழுது நாங்கள் எதைக் கூறினாலும் அதனை அவனால் திருப்தியாக இருக்க இயலாது. இதுபோல் நிலையில் யாம் பல்வேறு தருணங்களில் முன்னுரை என்ற ரீதியிலேயே கூறும்பொழுது வருகின்றவனுக்கு அத்தனையையும் வெட்டவெளிச்சமாக கூறாவிட்டாலும் இலைமறை காயாக கூறுகிறோம். ஆனால் அவன் அதை அவன் புரிந்து கொள்வதில்லை.