அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
நாங்கள் கூறுகின்ற சூட்சுமத்தை யாரும் புரிந்து கொள்ளவேயில்லை. ஒரு மனிதன் தன் தேவை மறந்துவிட்டு பிறருக்கு சேவையையும் பொது நல தொண்டையும் செய்ய துவங்கும் பொழுதே அவன் தேவையை இறைவன் கவனிக்க துவங்கி விடுவார் என்பதே சூட்சுமம். எனவே தன்னைத்தான் தனக்குத்தான் தன் குடும்பத்தைத்தான் பார்ப்பதை விட்டுவிட்டு தான் தான் தான் தான் என்பதையெல்லாம் விட்டுவிட்டு இறைவனைத்தான் அவனின் கருணையைத்தான் இறைவன் அன்பைத்தான் இறையின் பெருமையைத்தான் இறைவன் அருளைத்தான் இறையின் பெருந்தன்மையைத்தான் புரிந்து கொண்டால் இந்தத் தான் ஓடிவிடும். இந்தத் தான் ஓடிவிட்டால் அந்தத்தான் (இறைவன் அருளைத்தான்) தன்னால் வந்துவிடும். அந்தத் தான் வந்துவிட்டால் எந்தத் தானும் மனிதனுக்கு தேவையில்லை.