கேள்வி: சனி நீராடு என்பது ஔவையின் வாக்கு. இது இருபாலருக்கும் பொருந்தும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்ன பலன்? நல்லெண்ணையை உட்கொள்ள வேண்டாம் என்று சித்த மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.
இறைவன் அருளால் நல்லெண்ணெய் நல்ல எண்ணையாக இருந்தால் தாராளமாக பயன்படுத்தலாம். தவறொன்றுமில்லை. அடுத்ததாக சனி நீராடு என்பது பொதுவாக எல்லொருக்கும் பொருந்தும் என்றாலும் கூட உடலமைப்பை மிக நுணுக்கமாக பார்த்தால் இது ஆண்களுக்கு 100-க்கு 100 பொருந்தும். அதற்காக பெண்கள் அன்று எண்ணெய் ஸ்நானம் எடுக்கக்கூடாது என்று கூறவில்லை. அன்று எடுப்பதை விட சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் எள் எண்ணெய் ஸ்நானம் எடுப்பது சிறப்பு. சில ஆண்கள் செவ்வாய்க்கிழமை அன்றும் எடுக்கிறார்கள். இருந்தாலும் எம்மைப் பொறுத்தவரை சனிக்கிழமை ஆண்களுக்கும் வெள்ளிக்கிழமை பெண்களுக்கும் அவர்களின் உடலமைப்புக்கு ஏற்றதாகும். நல்ல முறையிலே தரமான எள் எண்ணெயாக பார்த்து பிரம்ம முகூர்த்தத்திலே தேகம் (உடல்) எங்கும் தேய்த்து குறைந்தபட்சம் ஏக நாழிகையாவது அதனை அப்படியே விட்டுவிட்டு சூரிய உதயத்திற்கு முன்னால் குளிர்ந்த நீரிலே ஸ்நானம் செய்வதே அதன் பரிபூரண பலனைத் தரும். எலும்புகளுக்கு வலிமை தரும். நரம்பு தளர்ச்சியை நீக்கும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். 72,000 நாடிகளை சுத்தி செய்யும். ஒழுங்கான முறையில் இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரவேண்டும்.
கேள்வி: திருப்பட்டூர் (திருச்சி அருகே பிரம்மா ஸ்தலம்) ஸ்தலத்தைப் பற்றி?
விதி மாறவில்லையே? என்று ஏங்கக்கூடியவர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. ஆனாலும் வழக்கம் போல் வியாபார ஸ்தலங்களில் அதுவும் ஒன்றாகிவிட்டது. அதற்காக மனிதன் விசனம் கொள்ளாமல் அங்கு சென்று முடிந்த வழிபாடுகளை செய்து கொண்டே வர கட்டாயம் வாழ்க்கையில் மிகக் கடுமையான விதியைப் பெற்றவர்கள் அந்த விதியிலிருந்நு விடுதலை பெறுவார்கள்.
திருப்பட்டூர் பிரம்ம்புரீஸ்வரர் கோவிலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கலாம்.